அங்கு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடி செல்வதற்காக வாகனத்தின் ஹேண்டிலை பிடித்து பல முறை பலமாக அசைத்தும் இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து வண்டியை எடுத்து செல்ல முயன்றார். அப்போது வாகனத்திலிருந்து முன் பாக்க சக்கரத்துடன் சேர்ந்து சங்கிலி மூலம் பூட்டு போடப்பட்டிருந்ததால் அதை திறக்க அந்த மர்ம நபர் தன்னிடம் இருந்த பல வகையான சாவிகளை எடுத்து திறக்க முயன்றும் முடியவில்லை. பின்னர் அருகில் நிறுத்தி இருந்த ஸ்கூட்டரின் பூட்டை உடைத்து திருட முயன்றும் முடியாததால் ஏமாற்றத்துடன் அந்த நபர் திருப்பி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து சத்யராஜ் மன்னார்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தேடி வருகின்றனர்.
அதிமுக, தவெகவினர் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்