நன்றி விசுவாசத்திற்கு பெயர்பெற்ற நாயை மிஞ்சிய பூனை

மன்னார்குடி அருகே இராமபுரத்தில் வசிக்கும் சசிகுமார், தனது இரண்டு குழந்தைகளைப் போலவே இரண்டு பூனைகளை வளர்த்து வருகிறார். தினசரி வேலை முடிந்து வீடு திரும்பியதும், குழந்தைகள் உறங்கினாலும், பூனைகளுடன் நேரத்தைச் செலவிட்டு அவற்றுக்கு உணவளித்த பின்னரே தான் உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு சசிகுமாரின் வீட்டிற்குள் 6 அடி நீளமுள்ள விஷப் பாம்பு நுழைய முயன்றபோது, அவரது இரண்டு பூனைகளும் 'மியாவ் மியாவ்' என கத்தியபடி பாம்பை விரட்டியடித்தன. மேலும், அவை தனது எஜமானின் குழந்தையையும் பாதுகாத்தன. பூனைகளின் இந்த எஜமான் விசுவாசப் போராட்டம் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒன்று.

தொடர்புடைய செய்தி