மீதம் உள்ள 4 லட்சம் ரூபாயை தரவேண்டும் என பாலகிருஷ்ணன் திருமுருகனிடம் பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளார். பணம் தருவதற்கு காலதாமதமானதால் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தந்தை ஜம்புநாதன், அவரது மகள் ரோகினி மற்றும் நெடுவாக்கட்டையைச் சேர்ந்த தர்மராஜ் ஆகிய நான்கு நபர்களும் சேர்ந்து பாலகிருஷ்ணனுக்கு பணம் கொடுக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திருமுருகன் தனது இறப்பிற்கு பாலகிருஷ்ணன், ரோகினி, தர்மராஜ், ஜம்புநாதன் உள்ளிட்ட 4 பேர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மன்னார்குடி போலீசார் இந்தத் தற்கொலை சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணன், அவரது மகள் ரோகினி மற்றும் நெடுவாக்கட்டை பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமுறைவாக உள்ள பாலகிருஷ்ணனின் தந்தை ஜம்புநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.