மன்னார்குடி: பச்சிளம் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கிய தவெக கட்சியினர்

தமிழக வெற்றி கழகம் சார்பில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகங்கள் வழங்கப்பட்டது. வீரமங்கை வேலுநாச்சியார் 295வது பிறந்தநாளை ஒட்டி மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று (ஜனவரி 3) பிறந்த 8 பச்சிளங் குழந்தைகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் உடை, பால் பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு த.வெ.க மன்னை நகர ஒருங்கிணைப்பு குழு தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார்த்திக், பிரபு, சுந்தர், ராகவேந்திரன், தீனதயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி