மன்னார்குடியில் கொடி சப்பரத்தில் சுவாமி உலா

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா நேற்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு ராஜகோபாலசுவாமி ருக்மணி சத்தியபாமா உடன் யானை வாகன மண்டபத்தில் இருந்து கொடிச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நகரின் பல்வேறு வீதிகள் வழியாக வந்த சுவாமிக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் ஆலயத்தின் நான்கு வீதிகள் வழியாக வந்து சப்பரக் கோவிலை அடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி