மன்னார்குடியில் தென்னிந்திய அளவிலான எழுவர் ஹாக்கி போட்டி

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மன்னை ஹாக்கி கிளப் சார்பாக, பின்லே மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த இரண்டு தினங்களாக தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. 

இதில் கேரளா, பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இறுதி சுற்றுக்கு கேரளா கொச்சின் அணியும், மன்னார்குடி விவேக் அணியும் முன்னேறி விளையாடிய நிலையில், இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், 2-0 என்ற கணக்கில் கேரளா கொச்சின் அணி வெற்றி பெற்று, வெற்றிக்கோப்பையையும் ரூ. 15,000 பரிசுத்தொகையையும் வென்றது. இரண்டாமிடத்தை மன்னார்குடி விவேக் அணி பெற்றது. பாண்டிச்சேரி அணி மூன்றாம் இடம் பெற்றுள்ளது. 

ஏராளமான விளையாட்டு வீரர்கள் போட்டியை கண்டு மகிழ்ந்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மன்னை ஹாக்கி கிளப் தலைவர் ஏ.எஸ். அசோகன், செயலாளர் மாரிமுத்து, இணைச் செயலாளர் அசோக்குமார், துணைத் தலைவர் ஜெயக்குமார், உடற்கல்வி ஆசிரியர் செங்குட்டுவன் ராஜ்மோகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி