மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், நெல் கொள்முதல் நிலையங்களில் 2 கிலோ வரை கூடுதல் எடை வைத்து கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியளிப்பதாகவும், இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், நாடு முழுவதும் கிராமங்களில் வர்த்தக ஒப்பந்த நகல்களைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.