உலக சேவா அமைப்பின் மூலம் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் மேம்பாடு அடையும் வகையிலும் சேவைத் திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெருகவாழ்ந்தான் கிராமம் 374வது கிராமமாக உலக சேவா சங்கம் மூலம் தொடங்கப்பட்டது. 5 மாதங்கள் நடைபெறும் இந்த கிராமிய சேவைத் திட்டத்திற்கான செலவுகளை பெருகவாழ்ந்தான் அன்பழகன் கோபாலர் குடும்பத்தினர் ஏற்றுள்ளனர்.
பெருகவாழ்ந்தானில் நடைபெற்ற கிராமிய சேவைத் திட்ட தொடக்க விழாவில் உலக சமுதாய சேவா சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் சுமார் 300 பேர் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்வியாளர் பெருகவாழ்ந்தான் இளங்கோவன் செய்திருந்தார்.