ஜோத்பூர் விரைவு ரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல கோரிக்கை

நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் கௌரவத் தலைவர் சேது. சந்தான ராமன் தலைமையில் நடைபெற்றது. இயக்கத்தின் 4-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளராக ஜெகதீஷ் பாபு, தலைவராக பத்மஸ்ரீராமன், செயலாளராக செல்வராஜ், பொருளாளராக ரவிச்சந்திரன், துணைத் தலைவர்களாக ராஜேந்திரன், சிவக்குமார், நமச்சிவாயம், ரவிச்சந்திரன், துணை செயலாளர்களாக செந்தில்குமார், இளவரசன், ராஜேஷ்குமார், செந்தில்நாதன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். நீடாமங்கலம் கிளை நூலகத்திற்கு புதிய இடம் தேர்வு செய்து அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டட வசதி ஏற்படுத்த தமிழக அரசை கேட்டுக்கொள்வது, பொது மருத்துவ முகாம் நடத்துவது, ஜோத்பூர் செல்லும் விரைவு ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும், சுற்றுச்சூழலை மேம்படுத்த மரங்களை வளர்க்கவும், விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி