அரசுப்பள்ளியில் உள்ள புதிய சமையல் கூடத்தை திறக்க கோரிக்கை

திருவாரூர் மாவட்டம் களப்பால் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில், ரூ. 8.44 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சமையலறை கட்டிடம் பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுகாதாரமற்ற பழைய கட்டிடத்தில் சத்துணவு பெறுவதால் அச்சமடைந்துள்ளனர். பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய கட்டிடத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி