திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசல், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு இன்று (பிப்ரவரி 6) திறப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி, நேற்று (பிப்ரவரி 5) பள்ளிவாசலைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மேளதாளங்களுடன் 150 தட்டுகளில் பூ, பழங்கள், இனிப்புகள், வாழைத்தார்கள் உள்ளிட்ட சீர்வரிசைகளை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.