ராஜகோபாலசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.12,90,183

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில், உற்சவர் பெருமாள் சந்நிதியில் உள்ள காணிக்கை உண்டியல் கடந்த 2023-ஆம் ஆண்டு கடைசியாக திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை துணை ஆய்வாளர் ராணி முன்னிலையில் திறக்கப்பட்ட இந்த உண்டியலில், பணத்தாளாக ரூ. 11,33,707, நாணயங்களாக ரூ. 1,56,476 என மொத்தம் ரூ. 12,90,183 ரொக்கமும், 29 வெளிநாட்டு பணத்தாள்கள், 10.5 கிராம் தங்கமும், 49.5 கிராம் வெள்ளியும் காணிக்கையாக இருந்தது.

தொடர்புடைய செய்தி