மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவில் ஆனி தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் ராஜகோபால சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு ராஜகோபால சுவாமி வெள்ளி சேஷ வாகனத்தில் தெப்பக்குளக்கரையிலிருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஹரித்ராநதி தெப்பக்குளத்தின் கரைகளை வளம் வந்து கோவிலின் நான்கு வீதிகள் வழியாக கோவிலை அடைந்தார்.