திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 10 மணி முதல் மழை பெய்யத் தொடங்கி, அவ்வப்போது விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்திருநாள் தினத்திலும் கடைவீதிகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.