திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்த கலைஅமுதன் (60) என்பவருக்கு புதுவை என். ஆர். காங்கிரஸ் அமைச்சர் திருமுருகன் (50) வழங்கியதாகக் கூறப்படும் 41 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பியதால், செக் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 03.12.2025 அன்று அமைச்சர் திருமுருகனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து, 09.01.2026 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.