திருவாரூர்: ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து போராட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய மாணவர் இளைஞர் பெருமன்றத்தினர் மத்திய பாஜக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசுக்கு எதிராக ஆட்டோவை கயிறு கட்டி 1 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்று நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி