தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் எழுதிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்த கடித நகலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் மன்னார்குடி நகர ஒருங்கிணைப்பு குழு சார்பில் பேருந்து நிலையம், கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட நான்கு இடங்களில் பிளக்ஸ் பேனர்களாக அச்சிட்டு வைத்திருந்தனர். இதனை அறிந்த மன்னார்குடி நகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உரிய அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி த. வெ. க. தொண்டர்களை கொண்டு பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.