சேத்தமங்கலத்தில் மயில் உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை

சேத்தமங்கலத்தில் சாலையை கடக்க முயன்ற மயில் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அது உயிரிழந்தது. அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மயிலை மீட்டு ஓரம் வைத்தனர். பின்னர் பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரக அலுவலர் ரஞ்சித்குமார், வனவர் சீனிவாசன், வனக்காப்பாளர் துர்கா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி வன காவலர் குமார் நிகழ்விடத்திற்கு வந்து மயிலின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருவாரூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.

தொடர்புடைய செய்தி