திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மோதிலால் தெருவில் உள்ள ஆகாச மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. முக்கிய விழாவான பால் குடம் திருவிழா இன்று காலை நடைபெற்றது. அப்பலாச்சாரியார் குளக்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.