மன்னார்குடியில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு

மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த பயிற்சி மையத்தில் பேச்சு, செவித்திறன் பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் உளவியல் சிகிச்சை சிறப்பு பயிற்சியாளர்களால் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி