திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகி நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை பாராளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து மன்னார்குடி ஒன்றியம் முழுவதும் 5 குழுக்களாக பிரிந்து சென்று 55 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் கட்சி வரலாறு குறித்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.