மன்னார்குடி: ஜவுளி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் டிஆர்பி ராஜா

மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஜவுளி பூங்கா அமைப்பதற்கான பணி ஞாயிறு அன்று தொடங்கியது. தமிழக தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன் சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள், கிராம மக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த ஜவுளி பூங்கா மூலம் 2000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி