மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர். பின்னர் பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, மகளிருக்கு கிடைக்கக்கூடிய உரிமைத் தொகையை நிறுத்துவதற்கு எதிரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், யாரும் சிந்திக்காத வகையில் முதலமைச்சர் மாதந்தோறும் ரூ.1000 வழங்குவதாகவும் கூறினார். பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு பல நெருக்கடிகளையும் துரோகத்தையும் செய்வதாகவும் அமைச்சர் பேசினார்.