மன்னார்குடி: மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வந்திருந்தார். பரவாக்கோட்டையில் 1 கோடி 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி