திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி டெம்போ சாலை அருகே கொத்தவல்லி அம்மன் நகரில் குப்பைகளை தரம் பிரிக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மக்கும் குப்பை மற்றும் குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இயந்திரங்கள் மூலம் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாகவும் மக்கும் குப்பைகள் இயற்கை உரமாகவும் தயாரிக்கப்படுகிறது. இந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று (ஜனவரி 3) துறை சார்ந்த வல்லுநர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.