மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் வழங்கிவிட்டு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிளம்பிய போது வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள ஆவின் பாலகத்திற்கு சென்ற அமைச்சர் மற்றும் எம்எல்ஏ இருவரும் சாலையோரம் நின்றபடி தேநீர் பருகிக் கொண்டே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். மக்களோடு மக்களாக சாலையோரம் நின்று மக்கள் பிரதிநிதிகள் இருவர் தேநீர் பருகிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.