மன்னார்குடி: இருசக்கர வாகனத்தில் மோதி ஒருவர் பலி

கோட்டூா் கீழப்பள்ளிசந்தம் சாமியப்பன் மகன் ஜெயராமன் (50), ஆறுமுகம் மகன் சேகா் (65) இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை தாழந்திருவாசல் தா்கா அருகே வந்து கொண்டிருந்தனா். அப்போது, சதீஷ்குமாா் (33) ஓட்டிவந்த சுமை வாகனம் மோதியதில் ஜெயராமன், சேகா் காயமடைந்தனா். மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேகா், வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுமை வாகன ஓட்டுநா் சதீஷ்குமாரை கைது செய்தனா்.

தொடர்புடைய செய்தி