மன்னார்குடி அருகே, தவெக அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிப்படி, பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டூர் பகுதி விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில், கோட்டூர் கடைவீதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தனபால் தலைமை வகித்தார். இதில், திரளான விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.