மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சதீஷ்குமாருக்கு, 2020-ல் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், திருவாரூர் மகளிர் விரைவு நீதிமன்றம், 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.