மகாசிவராத்திரியை முன்னிட்டு மன்னார்குடி ஐயர்சமாது சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோவிலில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நான்கு கால சிவபூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிவனடியார்கள் சிவலிங்கங்களுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்து, வில்வம், புஷ்பம் கொண்டு பூஜைகள் செய்து வழிபட்டனர். மன்னார்குடியில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது.