லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கனரக வாகனங்களுக்கான (லாரி) வருடாந்திர தகுதிசான்று (FC) கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்தும், உயர்த்திய FC கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக அரசு கனரக வாகனங்களுக்கான FC கட்டண உயர்வுக்கு கால நீட்டிப்பு வழங்க கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனரக வாகன உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சுமார் 300க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக முதல்வர் லாரி உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசு அறிவித்த FC கட்டணத்தை குறைத்து, கட்டண உயர்வுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும், இல்லையென்றால் டெல்டா மாவட்டம் முழுவதும் லாரி உரிமையாளர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி