மேலநத்தம் முத்து மாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேல நத்தம் கிராமத்தில் உள்ள பழமையான ஶ்ரீ விஸ்வநாதர் விசாலாட்சி, ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. திருவிளக்குகளை கைகளில் ஏந்தி கிராம மக்கள் கோவிலின் நான்கு வீதிகள் வழியாக மேல தாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். 

பின்னர் திருவிளக்கை அம்மனாக பாவித்து பெண்கள் பூக்கள் குங்குமம் கொண்டு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்ற படி பூஜை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி