மன்னார்குடி காந்தி சாலையில் உள்ள பழமையான ஆஞ்சநேயர்சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த மூன்றாம் தேதி முதல் பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை புனித நீர் உள்ள குடங்களை தீட்சிதர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கும்பாபிஷேகம் செய்து வைத்தனர் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.