மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனை எதிரே ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. QPMS நிறுவனம் அரசுடன் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், சம்பள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும், பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி