கௌரவ விரிவுரையாளர்கள் காலவரையற்றஉள்ளிருப்பு போராட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மன்னை ராஜகோபாலசுவாமி அரசினர் கலைக்கல்லூரியில், அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் 12 மாத சம்பளம் வழங்க வேண்டும், UGC நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு, PF & EPF, ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வகுப்புகளை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பதாகைகளுடன் தமிழக அரசை கண்டித்து முழக்கமிட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி