மன்னார்குடி அன்னவாசல் சேனியத் தெருவைச் சேர்ந்த ராஜா, வடகாரவயல் அரசு நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மகள் ஹாஷினி, மன்னார்குடி தூயவளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 496/500 மதிப்பெண்கள் பெற்று திருவாரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100% மதிப்பெண்களும், தமிழ் மற்றும் அறிவியல் பாடங்களில் 99% மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 98% மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இவரை எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.