முன்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் செயல்படுத்தினால் தான் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2152 கோடி ரூபாய் கல்வி நிதியை ஒதுக்க முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரி வாயிலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர்.