மன்னார்குடியில் அரசு கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரியில், தமிழக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றம் தீர்ப்பளித்த யுஜிசி நிர்ணயம் செய்த 57,800 ரூபாய் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி