திருவாரூர்: கேக் வெட்டி கொண்டாடிய முன்னாள் அமைச்சர்- வீடியோ

மன்னார்குடி குழந்தைகள் ஆலயத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினார். மன்னார்குடியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை புனித குழந்தை இயேசு கோவிலில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்றார். ஆலய பங்குத் தந்தை மரியவியானி சிறப்பு பிரார்த்தனை செய்தார். நிகழ்ச்சியில் பங்குமன்ற செயலாளர் ஜூனியர், அதிமுக நிர்வாகிகள் மற்றும் சம்பத், அந்தோணி ஸ்டீபன் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் பொதுமக்கள் சிறுவர்களுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் கேக் வெட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினார்.

தொடர்புடைய செய்தி