திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். வடிகால் வாய்க்கால்களை தூர்வாரவும், பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து முதலமைச்சர் நிவாரணம் வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடன் வாங்கி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தொடரும் மழையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தவித்து வருவதாகவும் தெரிவித்தனர்.