தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட ஆட்சியில், தமிழரின் பண்பாட்டு அடையாளமான பொங்கல் திருநாளை சமூக நீதிக்கான கொண்டாட்டமாக 'திராவிட பொங்கல்' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிழக்கு ஒன்றியம் மற்றும் கூத்தாநல்லூர் நகரம் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். கபடி, மிதிவண்டி, கோ கோ, கைப்பந்து, கிரிக்கெட், ஓட்டப்பந்தயம் போன்ற பல்வேறு போட்டிகளில் ஆண், பெண் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினர். கிராமப்புற இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கும் இந்த முயற்சிக்கு வீரர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.