மன்னர்குடியில் மின் பாதுகாப்பு பயிற்சி

திருவாரூர் மின் பகிர்மான வட்டம் மன்னார்குடி கோட்டத்தின் சார்பில் மின் வாரிய பணியாளர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு மன்னார்குடியில் திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் பி. லதா மகேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயற்பொறியாளர் (பொறுப்பு) முனைவர். சா. சம்பத் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் பயிற்சி நிலைய முதுநிலை மேலாளர் இரா. சுந்தர்ராஜ் வரவேற்றார். மேற்பார்வை பொறியாளர் அவர்கள் தன் தலைமை உரையில் பணியாளர்கள் கண்டிப்பாக பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி பணி செய்யவேண்டும், பணியில் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும், மின் விபத்தில்லா வாரியமே நம் குறிக்கோள் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி