மன்னையில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி

மன்னார்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்ட அமைச்சூர் சிலம்பாட்ட கழகம் சார்பில் மன்னார்குடியில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. போட்டிகளை மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் காமராஜ் தொடங்கி வைத்தார். 

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நெடுவாக்கோட்டை என திருவாரூர் மாவட்டம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் சிலம்பாட்ட போட்டிகளில் பங்கேற்றனர். ஒற்றைக்கம்பு சுழற்றுதல், இரட்டைக் கம்பு சுழற்றுதல், தொடுமுனை ஆயுத விளையாட்டு என சிலம்பாட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் 10 முதல் 20 வயது வரையிலான மாணவ மாணவியர் பங்கேற்று தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மே மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி