குடவாசல் அருகே கண்டிரமாணிக்கம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ முகாமினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாமில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் பங்கேற்று மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, உயர் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.