நேற்று (ஜனவரி 16) காணும் பொங்கலையொட்டி மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடினர். காலை முதல் இரவு வரை மன்னார்குடி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து விளையாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி நேற்றைய தினம் இளைஞர்கள் மற்றும் ஆண்களுக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.