திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அண்ணாமலை நாதர் கோவில் தெருவில் உள்ள அண்ணாமலை நாதர் கோவில் குளத்தில் இன்று காலை மீன்கள் செத்து மிதந்தது. இதனைப் பார்த்து பகுதி மக்கள் மன்னார்குடி நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர் அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி நகர மன்ற தலைவர் மன்னை சோழராஜன் துணைத் தலைவர் கைலாசம் வார்டு உறுப்பினர் மீன்வளத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் ஆய்வு செய்தனர் பின்னர் மீன் மற்றும் குளத்து நீர் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.