திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், புலவர்நத்தம், பாப்பாக்குடி, நார்த்தாங்குடி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5000 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட 20 நாட்கள் ஆன தாளடி இளம் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கவும், பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.