பாஜக சார்பில் தமிழக அரசை கண்டித்து மன்னார்குடியில் பிரசாரம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாஜக சார்பில் 'நாளை நமதே தமிழ்நாடும் நமதே' என்ற தலைப்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய அரசு தமிழகத்திற்காக கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்தும், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும் பாஜக நிர்வாகிகள் உரையாற்றினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் கோட்டூர் ராகவன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த தெருமுனை பிரசாரத்தில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி