மன்னார்குடி: அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்பதற்காக திருவாரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு நெல்லின் ஈரப்பதத்தைப் பொறுத்து ஏற்படும் எடை இழப்புத் தொகை வசூலிப்பதை நிறுத்த வேண்டும், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வயது வரம்பு 60 என்பதை ரத்து செய்து உடல் வலுள்ளவரை சுமை தூக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி