உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. "வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2026" கண்காட்சியை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா தொடங்கி வைத்தார். இந்த முகாமில் விவசாயம் சார்ந்த உபகரணங்கள், நவீன விவசாய இயந்திரங்கள், ட்ரோன் தொழில்நுட்பம், இயற்கை விவசாயம், புதிய இரகங்கள், மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறுதானிய உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி